Header Ads

  • சற்று முன்

    தமிழகத்தில் உழவர் சந்தை வளாகத்தில் விவசாயிகளால் நடத்தப்படும் மளிகை அங்காடி திறக்கப்பட்டுள்ளது

    தமிழகத்தில் முதன் முறையாக ராஜபாளையம் உழவர் சந்தை வளாகத்தில் விவசாயிகளால் நடத்தப்படும் மளிகை அங்காடி திறக்கப்பட்டுள்ளது.


    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று தமிழகத்தில் முதன் முறையாக  மளிகை பொருள் அங்காடி திறக்கப்பட்டுள்ளது. ராஜபாளையம் வட்டார துல்லிய பண்ணைய விவசாய உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கட்டப்பட்டுள்ள இந்த அங்காடியை விருதுநகர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் ரமேஷ் திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

    விவசாயிகளிடம் நேரடியாக விளை பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு, அதை சுத்தப்படுத்தி விவசாயிகள் மூலமாகவே அனைத்து பொருட்களும் இந்த அங்காடி மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

    குறிப்பாக பாரம்பரிய அரிசி வகைகள், அரிசி வகைகளால் தயார் செய்யப்படும் அவல் உள்ளிட்ட மதிப்பு கூட்டு பொருட்கள், ரசாயனம் கலக்காத சமையல் எண்ணை, சாப்பாட்டு அரிசி வகைகள், மல்லி, மிளகாய், பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் அனைத்தும் தரமாக கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். உழவர் சந்தைக்கு காய்கறிகள் வாங்க வரும் மக்கள் காய்கறிகளோடு, மளிகை பொருட்களையும் தரமாக வாங்கி செல்லும் நோக்கில் இந்த அங்காடி செய்யப்பட்டுள்ளதாகவும் துணை இயக்குனர் ரமேஷ் தெரிவித்தார்.

    செய்தியாளர் வி காளமேகம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad