மதுரை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு
மதுரை விமான நிலையத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 20 (இன்று)முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை பார்வையாளர்களுக்கு விமான நிலைய உள் வளாகத்தில் அனுமதி கிடையாது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா விமான நிலையத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் விமான நிலைய உள்வளாகம், ஓடுபாதை மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள், விமான நிலைய வெளி வளாகம் மற்றும் கியூ ஆர் டி என்னும் அதி விரைவு அதிரடிப்படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் மோப்பநாய்கள் வரவழைக்கப்பட்டு பயணிகள் உடமைகள் சந்தேகபடும்படியான இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். விமான நிலைய வளாகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் குடியரசு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் வரும் ஜனவரி 31 வரை பார்வையாளர்களுக்கு விமான நிலைய உள்ள காலத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை