கோவில்பட்டியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு வார விழா - பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு வட்டார போக்குவரத்து மற்றும் யூ.பி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து வாகன ஒட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கோவில்பட்டி தீயணைப்பு மீட்பு நிலையம் முன்பாக தொடங்கிய இப்பேரணியை கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தனர்
இப்பேரணி நகரின் முக்கிய பகுதியில் வழியாக அணிவகுத்து சென்றது மேலும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தியும்,துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கியும் ரயில் நிலையம் வரை பேரணியாக சென்றனர். இந்நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள் விஜயன், ஜாஸ்மின் லூர்து மேரி மற்றும் பள்ளி நிர்வாகிகள் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை