இராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பகுதியில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தளவாய்புரம் ஜீவா நகர் அருகே பகுதியில் 500க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றது இங்கு 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 75% கூலி உயர்வு, விடுமுறை தின சம்பளம் ரூ.200 மற்றும் நாள் ஒன்றுக்கு போனஸ் ரூ.20 உயர்த்தி வழங்கி கோரி 3அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி, சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் தலைமையில் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் போரட்டத்தில் ஈடுபட்டனர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜீவா நகர் பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்று செட்டியார்பட்டி பஸ் நிறுத்தம் அருகே 300க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை