Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 74வது குடியரசு தின கொடியேற்று விழா



    நேஷனல் பொறியியல் கல்லூரியில் 74வது இந்திய குடியரசு தின விழா  கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை பொறியியல் பிரிவு குரூப் கேப்டன் முனைவர் தினகரன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, தேசிய கொடி ஏற்றிவைத்து, அதற்கு மரியாதை செலுத்தி, குடியரசு தின சிறப்புரை வழங்கினார்.கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் நிர்வாக குழு உறுப்பினர் ஷண்மதி தலைமை தாங்கினார். 


    நேஷனல் பொறியியல் கல்லூரியின் இயக்குநர் முனைவர். எஸ்.சண்முகவேல், முதல்வர் முனைவர்.கே.காளிதாச முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பேராசிரியர்.ராஜேஷ்வரன், கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர்.மதிவண்ணன், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ மாணவிகள், எனப்பலர் கலந்து கொண்டு தேசியக் கொடிக்கு மரியாதை செய்தனர்.

    மேலும், கல்லூரி நுண்கலை மன்றம் சார்பில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, பேராசிரியை என்.வித்யா வரவேற்புரையாற்றினார். முதலாமாண்டு மாணவிகள் சரிகா மற்றும் எசுவேதாஸ்ரீ ஆகியோர் குடியரசு தின சிறப்புரை வழங்கினர். கல்லூரி தேசிய மாணவர் படை வீரர் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.  நிகழ்ச்சியின் இறுதியில் பேராசிரியை கோபிகா தேவி நன்றி கூறினார்.  நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி  நிறைவு பெற்றது.இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி இயக்குனர் மற்றும் முதல்வரின் வழிகாட்டுதலின்படி கல்லூரி தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர்கள் பிரகாஷ், ஹேமலட்சுமி  ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad