மதுரை.சோழவந்தானில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மாநில அளவிலான கூடை பந்தாட்ட போட்டியை இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஜி .பி. ராஜா துவக்கி வைத்தார்.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ஜேஜே ஸ்போர்ட்ஸ் அகடமி சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியினை மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜி. பி. ராஜா துவக்கி வைத்தார். மதுரை,சேலம் திண்டுக்கல், திருநெல்வேலி தூத்துக்குடி தஞ்சாவூர் கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 18க்கும் மேற்பட்ட கூடைப்பந்தாட்ட அணியினர் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன், பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் காளி, தெற்கு ஒன்றிய அமைப்பாளர் பால் கண்ணன், வடக்கு ஒன்றிய அமைப்பாளர் நல்லதம்பி, வாடிப்பட்டி பேரூர் இளைஞர் அணி பிரபு, சோழவந்தான் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், திமுக பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன், திமுக நிர்வாகிகள் சி. பி .ஆர். சரவணன் முள்ளை ஜீவபாரதி, சங்கரலிங்கம், மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஜே ஜே ஸ்போர்ட்ஸ் நிறுவனர் முரளி சோழகர், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, செயலாளர் குமார் வாண்டையார் மற்றும் நிர்வாகிகள் பல செய்திருந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை