சோழவந்தான் அருகே குருவித்துறை ஆதி மாசாணி அம்மன் கோவில் திருவிழா வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வழிபாடு
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள குருவிதுறையில் பிரசித்தி பெற்ற ஆதி மாசாணியம்மன் கோவில் உள்ளது. வருடந்தோறும் தை மாதம் திருவிழா நடைபெறும். நேற்று இரவு மயான பூஜை உடன் தொடங்கி இன்று காலை வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட சக்தி கரகத்தினை பூசாரி சின்னமாயன் சுமந்து வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். தொடர்ந்து திருக்கோவிலில் மாசாணி அம்மனுக்கு படையல் இட்டு பூஜைகள் செய்யப்பட்டது . நாளை திங்கட்கிழமை கோவில் முன்பாக பூக்குழி இறங்கும் வைபவமும். செவ்வாய் அன்று சக்தி கரகம் கரைத்தல் முளைப்பாரி ஊர்வலமும் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு மேல் கருப்புசாமி முனியாண்டி சாமிகளுக்கு மறு பூஜை நிகழ்வு நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆதி மாசாணி அம்மன் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை