சோழவந்தான் அருகே குருவித்துறை ஆதி மாசாணி அம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள குருவிதுறையில் பிரசித்தி பெற்ற ஆதி மாசாணியம்மன் கோவில் உள்ளது. வருடந்தோறும் தை மாதம் திருவிழா நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது குருவித்துறை மன்னாடி மங்கலம் தாமோதரன் பட்டி ஐயப்பன் நாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள் இன்று காலை வைகை ஆற்றில் இருந்து மஞ்சள் நீராடி ஊர்வலமாக வந்து கோவில் வளாகத்தில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர் பின்னர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது
சோழவந்தான் அருகே குருவித்துறை ஆதி மாசாணியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கிய போது எடுத்த படம்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை