வீரபாண்டிய கட்டபொம்மன் 263 பிறந்த நாள் விழா கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 263வது பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ வீரபாண்டிய கட்டபொம்மன் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சுதந்திர போராட்ட வீரர்வீரபாண்டிய கட்டபொம்மன் 263வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாரி உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருவருட்சிலைக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், ஒன்றிய செயலாளர் காந்தி என்ற காமாட்சி, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார், மாணவரணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், அதிமுக நிர்வாகிகள் கடம்பூர் மாயா துரை, கோபி,முருகன், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கருத்துகள் இல்லை