மழையால், விளைநிலங்கள் பாதிப்பு:
காரியாபட்டி : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, அரசகுளத்தில் மழைநீரால் 200 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டது. அறுவடை நேரத்தில் நெல், மற்றும் வெங்காய பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகியது. பாதிக்கப்பட்ட விவசாயிகளை, காரியாபட்டி ஒன்றிய அதிமுக செயலாளர்கள் ராமமூர்த்திராஜ், தோப்பூர் முருகன் முன்னிலையில் அதிமுகவினர் பார்வையிட்டனர். பாதிப்புக்குரிய, நிவாரண உதவிகள் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து ஏற்பாடு செய்வதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை