• சற்று முன்

    தமிழ் தமிழ் என்று பிழைப்புக்காக சொல்வது திமுக ஆனா தமிழ் என்று உணர்வோடு நிற்பது அதிமுக. கடம்பூர் ராஜூ பேசு

    திமுக பொய்யான வாக்குறுதி கொடுத்து தற்போது கோபுரத்தில் உள்ளது அது விரைவில் குப்பை மேட்டுக்கு வரும் என கோவில்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு... 

    மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் பொதுக்கூட்டம் அதிமுக சார்பில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட  புதியம்புத்தூரில் நடைபெற்றது‌.

    இக்கூட்டத்துக்கு ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மேற்கு ஒன்றிய செயலாளரும் மோகன் தலைமையில் மாவட்ட அவைத்தலைவர் என் கே.பெருமாள், மாவட்ட மாணவரணி செயலாளர் முருகேசன் முன்னிலையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்  கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேசுகையில் :

    திமுக பொய்யான வாக்கு உறுதி கொடுத்து கோபுரத்தில் போனாலும் நாளைக்கு குப்பைமேட்டிற்கு போவது உறுதி. தமிழ் தமிழ் என்று பிழைப்புக்காக சொல்வது திமுக ஆனா தமிழ் என்று உணர்வோடு நிற்பது அதிமுக. திமுக 500-க்கும் மேற்பட்ட பொய்யான வாக்குறுதலை கொடுத்து ஸ்டாலின்தால் வராரு விடுதலை போறாரு எனக்கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் வாரிசு படத்திற்கு வாரிசால் பிரச்சனை வந்தது அந்த வாரிசுக்கு தற்போது அமைச்சர் பதவி.

    அதிமுகவில் வாரிசு இடமில்லை தொண்டர்களுக்கு தான் பதவி ஒரு தொண்டர் தான்  முதல்வராக முடியும் என்பது நிரூபித்து காட்டி அதிமுக என்று பேசினார். இக்கூட்டத்துக்கு தலைமைக் கழகப் பேச்சாளர்கள் பட்டணம் (எ) நைனா முகமது, ஆண்டிப்பட்டி உமாசங்கர், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், வடக்கு மாவட்ட அவைத்தலைவர் என்.கே பெருமாள், முன்னாள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், மாணவரணி துணை செயலாளர் பீமராஜ், மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் கோபி (எ) அழகிரி, புதூர் நகர செயலாளர் ஆறுமுகசாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகவேல், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜவகர், மேற்கு ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் பொன்ராஜ்,கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் லட்சுமணப்பெருமாள்,கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ்,நகர மன்ற உறுப்பினர் கவியரசன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார், அம்மா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் நீலகண்டன், எட்டயபுரம் நகர செயலாளர் ராஜகுமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி,மற்றும் அதிமுக நிர்வாகிகள்  பழனி குமார்,முருகன்,கோபி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad