• சற்று முன்

    மதுரையில் போலீசார் மீது பெட்ரோல் குண்டுவீசி தப்பி ஓடிய பிரபல ரௌடி கைது



    மதுரை எஸ்எஸ் காலணி காவல் நிலைய எல்லைக்குப்பட்ட மாடக்குளம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தது போது அவ்வழியாக காரில் வந்த நபரை சார்பு ஆய்வாளர் அழகுமுத்து நிறுத்தியதும், போலீசாருக்கும் அந்த நபருக்கு வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி காரில் வைத்திருந்த அருவளை எடுத்து போலீசாரை வெட்ட முயற்சி செய்துள்ளார் அந்த நபர், அதிர்ஷ்டவசமாக தப்பிய போலீசாரை நோக்கி வீசி விட்டு, பின்னர் காரில் இருந்து பெட்ரோல் குண்டுகளை வீசிய தாக கூறப்படுகிறது.

    பின்னர் காரை விட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார், இந்த சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், காரில் வந்த நவர் பிரபல ரௌடியான கூல்மணி(எ) மணிகண்டன் என்பதும் இவர் மீது  கொலை, கொள்ளை உள்ளிட்ட போன்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மதுரை தெப்பக்குளம் காவல்நிலையத்தில் பணியில் இருந்த போது சரா்பு ஆய்வாளர் அழகுமுத்து கூல்மணி மீது வழக்குப்பதிவு செய்துள்ளதும் இதனால் அவர் மீது கொலை வெறியில் இருந்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து எஸ்எஸ் காலனி போலீசார்  தலைமறைவான கூல்மணியை  பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad