Header Ads

  • சற்று முன்

    மலம் கழிப்பதை அடக்கினால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?


    ஒருவர்
    எத்தனை மணிநேரத்திற்கு ஒருமுறை மலம் கழிக்க வேண்டும்? இந்த கேள்வியை கூகுளில் தேடினால் ஒரு நாளுக்கு மூன்று முறை முதல் மூன்று நாட்களுக்கு ஒருமுறை என பலவிதமான பதில்கள் கிடைக்கும்ஆனால், இதற்கு உண்மையான பதில்: உங்களுக்கு அதற்கான உந்துதல் ஏற்படும் போதெல்லாம் மலம் கழிக்க வேண்டும் என்பதுதான்மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும்போது அதனை செய்யாமல் அடக்குவது, காலம் தாழ்த்துவதால் குடல் புற்றுநோய், செரிமான மண்டலத்தில் சிறிய மற்றும் பெரிதளவிலான புடைப்புகள் ஏற்படுவது, மூலநோய், ஆசனவாயிலிருந்து நீர் வெளியேறுதல் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படும்

    மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதலை தூண்டுதல்



    உணவு உண்பது, மலம் கழிக்கும் எண்ணத்தைத் தூண்டுவதாக, 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் உடலியல் நிபுணர்கள் கண்டறிந்தனர். குறிப்பாக, காலை உணவுக்குப் பிறகு அந்தத் தூண்டுதல் அதிகரிக்கிறது.  குழந்தைகளுக்கு மலம் கழிக்கும் உந்துதல் ஏற்படும்போது அதனை தாமதிக்காமல் செய்கின்றனர். ஆனால், நடக்கத் தொடங்கிய அதே வயதில், மலம் கழிப்பதை அடக்குவதையும் கற்றுக்கொள்கிறோம்.  மலம் கழிப்பதை சிறிது நேரம் அடக்கும்போது அந்த உந்துதல் தற்காலிகமாக நீங்கிவிடும். ஆனால், நீண்ட நேரத்திற்கு மலத்தை அடக்குவது பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும்.

    மலம் வெளியேறும் நேரத்தைக் கண்டறிதல்

    நீங்கள் உண்ணும் உணவு மலமாக வெளியேற எவ்வளவு நேரம் ஆகும் என்பதைத் தெரிந்துவைத்திருப்பது அவசியம்ஏனெனில், உணவு உண்டபின் அது மலமாக வெளியேறுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வது, வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கலுடன் தொடர்புடையதுஇந்த நேரத்தைக் கணக்கிடகு மிக எளிய வழி உள்ளது. கையளவு சமைக்காத இனிப்பு சோளத்தை விழுங்கிவிட்டு, பின்னர் மலத்தில் சோளக்கரு தெரிகிறதா என்பதைக் கவனியுங்கள். இனிப்பு சோளத்தை விழுங்கிய எட்டு முதல் 24 மணிநேரத்தில் இது நிகழ வேண்டும்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad