• சற்று முன்

    அம்மை நோயால் சுருண்டு விழும் மாடுகள் பரிதாபம்.


    கோவை அன்னுார் வட்டாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. அன்னுார் வட்டாரத்தில், காரே கவுண்டன் பாளையம், மசக்கவுண்டன் செட்டிபாளையம், பிள்ளையப்பன் பாளையம், பொகலூர், அல்லப்பாளையம் ஊராட்சிகளில் 6,000க்கும் மேற்பட்ட கறவை மாடுகள் உள்ளன.  தினமும் ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்களுக்கு இரு வேளைகளில் பால் கறந்து விற்பனை செய்து வருகின்றனர். சில வாரங்களாக அன்னுார் பகுதியில் ஆடுகளுக்கு அம்மை நோய் பரவி வருகிறது. மாடுகளின் உடலில் கொப்புளங்களும், கட்டிகளும் ஏற்பட்டுள்ளன.

    இதனால் பால் சுரப்பது குறைந்துவிட்டது. சில மாடுகள் சுருண்டு சுருண்டு விழுகின்றன. கருச்சிதைவு ஏற்படுகிறது. பொது மக்கள் கூறுகையில், 'விவசாயம் பொய்த்துப் போனதால் கறவை மாடுகளை வைத்து தான் ஜீவனம் செய்து வருகிறோம். தற்போது பால் சுரப்பு குறைந்து விட்டதால், வருமானம் இல்லாமல் தவிக்கிறோம். மாடுகள் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. உடனடியாக அனைத்து ஊராட்சிகளிலும், சிறப்பு கால்நடை முகாம் நடத்தி, அம்மை நோய் தடுப்பூசி போட வேண்டும். இறந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு, இழப்பீடு வழங்க வேண்டும்' என்றனர்.

    கோவை மாவட்ட நிருபர் அக்கினிபுத்திரன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad