பணி நிரந்தரம் வேண்டி தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் எம்.எல்.ஏ விடம் கோரிக்கை மனு..
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் P.R.இளங்கோ மற்றும் மாலையில் கரூர் மாவட்டம் குளித்தலை சட்ட மன்ற உறுப்பினர் இரா. மாணிக்கம் அவர்களையும் தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் சந்தித்து வருகின்ற சட்டமன்ற கூட்டத்தில் 12,200 பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் குறித்து குரல் தர வேண்டும் என்றும் மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பள்ளிக்கல்வி அமைச்சர் பேச வேண்டும் என்றும் கூறி நமது கோரிக்கை மனுவை அளித்தோம். நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மாநில துணைச் செயலாளர் ஆ. மாரியம்மாள், மாவட்டத் தலைவர் மா. முருகானந்தம், மாவட்டச் செயலாளர் பா.ஜீவரத்தினம் ஒன்றிய பொறுப்பாளர்கள் சிவா, விண்ணரசி, காளேஸ்வரி,பானுமதி ஆகியோர் கலந்து கொண்டனர். மனுவை பெற்றுக்கொண்ட சட்ட மன்ற உறுப்பினர்கள் இருவரும் உங்களின் பிரச்சினை புரிகிறது... ஏற்கனவே சாலைப் பணியாளர்கள் பணி நியமனம் குறித்து குரல் எழுப்பி அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. அதுபோல் உங்களுக்கு நாங்கள் குரல் தருகிறோம் என்றனர். நிச்சயமாக உங்களுக்கு பணி நிரந்தரம் கிடைக்கும் என்று நம்பிக்கை தந்தனர். மேலும் நீங்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யக் கூடிய வாய்ப்பு உள்ளது என நம்பிக்கை தந்தார்கள் என்று பகுதி நேர ஆசிரியர்கள் சந்தோஷமாக கூறினர்.
செய்தியாளர் வி.காளமேகம்
கருத்துகள் இல்லை