வாலாஜாபேட்டை யூத்ரெட்கிராஸ் சார்பில் முதலுதவி, பேரிடர் மேலாண்மை குறித்த புத்தாக்க பயிற்சி இன்று நடைபெற்றது
வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கல்லூரி வளாகத்தில் யூத்ரெட்கிராஸ் சார்பில் முதலுதவி, பேரிடர் மேலாண்மை குறித்த புத்தாக்க பயிற்சி இன்று நடைபெற்றது. இப் புத்தாக் பயிற்சிக்கு கல்லூரி முதல்வர் (பொ) ஜெ.பூங்குழலி தலைமை தாங்கி பேசினார். முன்னதாக யூத் ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் இ.பொற்செல்வி வரவேற்று பேசினார்.
புத்தாக்க பயிற்சி கருத்தரங்கின் சிறப்பு அழைப்பாளராக ஒருங்கிணைந்த வேலூர் திருவண்ணாமலை மாவட்ட முதலுதவி பயிற்சி முகாம் அமைப்பாளர் மற்றும் ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது யூத் ரெட்கிராஸ் கொள்கைகள், இந்தியன் ரெட்கிராஸ் வரலாறு, நோக்கம் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். மேலும் அவர் பேசுகையில் முதலுதவி அளிக்கும் முறைகள் குறித்தும் பேரிடர் காலங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் பயிற்சி அளித்தார். மனித உடலியல, ஆபத்து காலங்களில் அணுகுமுறை பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் நிலை சோதித்தல், உள்காயம், மீட்பு நிலைக்கு நிரும்புதல் நிலை, சுவாசக்காற்று அறிதல், மயக்கமுறுதல், அதிர்ச்சி மாரடைப்பு, பூச்சிக்கடி, பாம்புக்கடி போன்ற பாதிப்புகள் ஏற்படும் போது முதல் உதவியாளர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று பயிற்சி அளித்தார்.
கல்லூரியின் யூத் ரெட்கிராஸ் குழுவின் உறுப்பினர்கள் தமிழ் துறைத்தலைவர் எஸ்.ஜி.கவிதா, வணிகவியல் துறை தலைவர் எம்.அமுதா, முன்னிலை வகித்து பேசினர். நிகழ்வில் யூத் ரெட்கிராஸ் சார்பில் ஆர்.சுகந்தி, பி.லட்சுமி, வி.ராதாதிகா, பி.ஜான்சிராணி, ஆர்.சகுகாந்தி, பி.ரமா மாணவிகள் கே.அபிதா, ஆர்.ஆர்த்தி உள்பட மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் நிறைவாக மாணவி பி.பபிதா நன்றி உரையாற்றினார்.
வேலூர் மாவட்ட நிருபர் S. சுதாகர்
கருத்துகள் இல்லை