திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் - ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிகள், 'கோபால விலாசம்' மண்டபத்தில் எழுந்தருளினர்
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள, 108 வைணவ ஸ்தலங்களில் முக்கியமானதாகவும், பிரசித்தி பெற்றதாக திகழும் ஸ்ரீஆண்டாள் கோவிலில் மார்கழி உற்சவம் வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. மார்கழி உற்சவத்தின் சிறப்பு அம்சமான பகல்பத்து திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. தினமும் ஸ்ரீஆண்டாள் - ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் தினமும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகின்றனர். மார்கழி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரியபெருமாள் சன்னதியில் உள்ள ' கோபால விலாசம்' மண்டபத்தில் ஸ்ரீஆண்டாள் - ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிகள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை