இடை நிலை ஆசிரியர் போராட்டத்திற்கு டி.டி.தினகரன் ஆதரவு
சென்னை, DPI வளாகத்தில், சமவேலைக்குச் சம ஊதியம் வழங்க வேண்டி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில் கழக பொறியாளர் அணி செயலாளரும், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட கழக செயலாளருமான திரு.ம.கரிகாலன், கழக கொள்கை பரப்பு செயலாளர் செல்வி.C.R.சரஸ்வதி, கழக அமைப்புச் செயலாளர் திரு.R.நேதாஜி கணேசன், கழக அமைப்பு செயலாளரும், மத்திய சென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளருமான திரு.V.சுகுமார் பாபு, மத்திய சென்னை கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.L.ராஜேந்திரன், வடசென்னை மத்திய மாவட்டக் கழக செயலாளர் திரு.A.R.பழனி, தென்சென்னை வடக்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.K.விதுபாலன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை