கோவில்பட்டியில் எழுத்தாளர் கி ராஜநாராயணன் நினைவரங்கத்தை முதலமைச்சர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
கரிசல் இலக்கிய எழுத்தாளர் கி.ராஜ நாராயணனின் நினைவரங்கம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார் இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 2 ஏக்கர் பரப்பளவு சுமார் 1 கோடி 70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நினைவரங்கத்தை சென்னையிலிருந்து தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார் இதனை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், நகர் மன்ற தலைவர் கருணாநிதி,ஊராட்சி ஒன்றிய தலைவி கஸ்தூரி சுப்புராஜ்,ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் சந்திரசேகர், மற்றும் கிராவின் பிள்ளைகள், எழுத்தாளர்கள் நினைவரங்கத்தை பார்வையிட்டனர்.
கருத்துகள் இல்லை