இமாச்சல பிரதேசத்தின் புதிய முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு
கடந்த நவம்பர் மாதம் 12 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது 68 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு இந்தத் தேர்தலின் முடிவுகள் கடந்த மாதம் 8ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. காங்கிரஸ்,பாரதிய ஜனதா, ஆம் ஆத்மி கட்சி. மும்முனை போட்டியாக இருந்தாலும், தேத்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக மட்டுமே கடும் போட்டி நிலவியது.68 சட்டப்பேரவைத் தொகுதிகலில் காங்கிரஸ் 40 தொகுதிகளையும், பாஜக 25 தொகுதிகளையும் கைப்பற்றியது.,மூன்று தொகுதிகளில் சுயேட்சைகள் வெற்றி பெற்றன.
இமாச்சல பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான சுக்விந்தர் சிங் சுகு, நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். மேலும் முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக கருதப்படுகிறார். முதலில் இமாச்சல பிரதேசம், ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள நடவுன் பகுதியைச் சேர்ந்த சுகு, தனது கல்லூரிப் பருவத்தில், இந்திய தேசிய மாணவர் சங்கத்தில் (NSUI) காங்கிரஸின் மாணவர் பிரிவில் சேர்ந்தார்.
இமாச்சலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பிரியங்கா காந்தியின் இறுதிக்கட்ட பிரச்சாரம் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. பாஜகவில் உள்ள உட்கட்சி பூசல் காங்கிரஸ் கட்சியின் காணப்படுகிறது .
கருத்துகள் இல்லை