Header Ads

  • சற்று முன்

    மதுரையில் வீடுகளில் கொள்ளை அடித்த பணத்தில் விவசாய நிலம் வாங்கி செட்டில் ஆன திருடனை பிடித்த தனிப்படை போலீசார்


    மதுரை மாநகரில், நீண்ட காலம் நிலுவையில் உள்ள திருட்டு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாநகர் காவல் ஆணையர் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்,

    கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ந் தேதி இரவு மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்கு உட்பட்ட துரைசாமி நகரில் வசித்து வரும் ரவீந்திரன் என்பவரின் வீட்டிலிருந்து 58 பவுன் தங்க நகைகள், 9.5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் DBBL இரட்டைக்குழல் துப்பாக்கி ஆகியவைகளை திருடிச் சென்றவழக்கில் தொடர்புடைய, மதுரை சக்கிமங்கலம் முனியாண்டிபுரத்தை சேர்ந்த பெஞ்சமின், (வயது 33) என்பவரை கைது செய்து விசாரித்த போது, பெஞ்சமின் மீது மதுரை நகர், மதுரை மாவட்டம், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 20 திருட்டு வழக்குகள் இருப்பது தெரிந்தது. 

    மேலும் பெஞ்சமின் திருடிச் சென்ற தங்க மற்றும் வெள்ளி நகைகளை விற்பனை செய்து, அந்த பணத்தில் திருநெல்வேலி, ராதாபுரத்தில் சுமார் 2 3/4 ஏக்கர் விவசாய நிலம் வாங்கியுள்ளது தெரியவந்தது.  அதன்பேரில் பெஞ்சமினிடமிருந்து DBBL இரட்டைக்கழல் துப்பாக்கி மற்றும் 2 3/4 ஏக்கருக்குரிய பத்திரம் மற்றும் மேற்படி பெஞ்சமின் கடந்த 20.12.22 ஆம் தேதி தேதி தென்காசி, குத்துக்கல் வலசை என்ற ஊரில் திருடிய 20 கிராம் எடையுள்ள நவரத்தின மோதிரம்-1, 8 கிராம் எடையுள்ள பச்சைக்கல் மோதிரம்-1 மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டது. அதனைதொடர்ந்து பெஞ்சமின் என்பவரை கைது செய்து  சொத்துக்களை மீட்ட  தனிப்படையினரை மதுரை மாநகர காவல் ஆணையர் பாராட்டினார்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad