Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே சவலப்பேரி கிராமத்தில் சுமார் 100 ஏக்கருக்கு பரப்பிலான மக்காச்சோளம் காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.


    கோவில்பட்டி அருகே 100 ஏக்கர் பரப்பிலான மக்காச்சோளம் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியது. சேதமான மக்காச்சோள பயிர்களை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சவலப்பேரி கிராமத்தில் சுமார் 100 ஏக்கருக்கு பரப்பிலான மக்காச்சோளம் பயிரிட்டு வருகின்றனர். மக்காச்சோளம் பயிர்களை இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து  மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. சேதமான மக்காச்சோள பயிர்களை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று சேதமடை ந்த பயிர் பாதிப்புகளை பார்வையிட்டார். கண்ணீர்மல்க இருந்த பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.சேதமடைந்த மக்காச்சோளம் பயிருக்கு தமிழக அரசு மூலமாக நிவாரணத் தொகையை வழங்க முயற்சி செய்வோம்,சட்டமன்றத்தில் குரல் கொடுப்போம் என பேசினார். இதில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார், எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஆசூர் காளிபாண்டி,தமிழக விவசாய சங்க மாவட்ட செயலாளர் அருமைராஜ், கோபி, முருகன், உள்ளிட்ட விவசாயிகள் உடன் இருந்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad