Header Ads

  • சற்று முன்

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

    அடர்ந்த வனப்பகுதியை கடந்து செல்லும் இந்த ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவை, நீலகிரி மாவட்டங்களில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. நேற்று இரவு பெய்த மழையால் மலை ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் உருண்டு தண்டவாளத்தில் விழுந்தன. 

    இது தவிர மரங்களும் முறிந்து விழுந்தன. மேலும் ரெயிலில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து, மலை ரயில் இன்ஜின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். தொடர்ந்து ரயிலை பின்னோக்கி கல்லாறு ரயில் நிலையத்திற்கு கொண்டு வந்தார். 

    பின்னர் அங்கிருந்து மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் வந்தது. ரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு அவர்கள் செலுத்திய தொகை திருப்பி அளிக்கப்பட்டது. இதுகுறித்து ரயில்வே துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாறைகள் மற்றும் நிலச்சரிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக சேலம் கோட்டா ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் கோட்டா ரயில்வே நிர்வாகம் கூறியதாவது: கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் பாதையில் ராட்சத பாறைகள் விழுந்துள்ளன. இதையடுத்து மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் மற்றும் குன்னூர் ஊட்டி மலை ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    கோவை மாவட்ட நிருபர் : அக்கினிபுத்திரன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad