இராஜபாளையம் மாலையாபுரம் பகுதியில் பத்து லட்ச ரூபாய் மதிப்பில் ரேஷன் கடைக்கு பூமி பூஜை போட்ட சட்டமன்ற உறுப்பினர் .
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள மாலையாபுரம் பகுதியில் பத்து லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரேஷன் கடை கட்டுவதற்கு இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் பூமி பூஜை போட்டு துவங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து அப்பகுதியில் நடைபெற்று வரக்கூடிய சுகாதார வளாகம் கட்டும் பணி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்டார் அப்பொழுது பகுதியைச் சேர்ந்த பெண்கள் தங்கள் பகுதியில் கலையரங்கம் கட்டிதரவேண்டும் என கோரிக்கை வைத்தனர் இதை சட்டமன்ற உறுப்பினர் அடுத்த நிதியில் கட்டித் தருவதாக உறுதி அளித்தார் .
இந்த நிகழ்ச்சியில் ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தகுமார் இராஜபாளையம் யூனியன் துணைத் தலைவர் துரைகற்பகராஜ் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை