விவசாயிகளுக்கு வாரி வழங்கிய எடப்பாடியார் தலைமையிலான அரசு - இல்லை இல்லை எதுவும் என்று கூறி மக்களை ஏமாற்றி வருகிறது திமுக அரசு
கடந்த ஆட்சி காலத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு வாரி வழங்கிய எடப்பாடியார் தலைமையிலான அரசு - தற்போதைய திமுக அரசு இல்லை இல்லை எதுவும் என்று கூறி மக்களை ஏமாற்றி வருகிறது கோவில்பட்டியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து கழக இடைக்கால பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அறிவுறுத்தல் அதிமுக நகர கழக சார்பில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் திமுக அரசை கண்டித்து வரும் 13,தேதிகளில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம் குறித்து அதிமுக கட்சி நிர்வாகிகள் அதிமுக வார்டு செயலாளர்கள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கூட்டத்தில் பேசுகையில் : பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு 426 கோடி ரூபாய் வாரி வழங்கிய அரசு தான் எடப்பாடியார் தலைமையிலான அதிமுக ஆட்சிதான் தற்போது உள்ள அரசு மக்களுக்கு இல்லை இல்லை என்று சொல்லி ஆட்சி செய்யும் நிலைமைதான் திமுக ஆட்சி பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க தான் அதிமுக வரும் ஒன்பது 13,14 தேதிகளில் தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.
இக்கூட்டத்தில் நகர அவைத் தலைவர் அப்பாசாமி, நகர செயலாளர் விஜய்பாண்டியன், நகர துணை செயலாளர் மாதவராஜ், நகர பொருளாளர் ஆரோக்கியராஜ்,வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர், நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பகமூர்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன்,ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, மாவட்ட அம்மா நகர பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, பிரதிநிதி மகேஷ் பாலா,முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, அதிமுக நிர்வாகிகள் செண்பகம், ரவிச்சந்திரன், செந்தில், கிருஷ்ணமூர்த்தி, முருகன், கோபி, கனி, பழனிகுமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை