Header Ads

  • சற்று முன்

    விருதுநகர் மாவட்டத்தில், கொடிநாள் நிதி திரட்டும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்


    விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று  தேசிய படைவீரர் கொடிநாளை முன்னிட்டு, முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் 2022ம் ஆண்டிற்கான கொடிநாள் நிதி திரட்டும் நிகழ்ச்சியை, மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி நன்கொடை வழங்கி துவக்கி வைத்தார். கொடிநாள் நிதி திரட்டும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து ஆட்சியர் மேகநாதரெட்டி பேசும்போது,

    இந்திய திருநாட்டில் முப்படைகளில் பணிபுரிந்து தேச நலனுக்காக உயிர் நீத்த, காயமடைந்த வீரர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில், ஆண்டு தோறும் டிசம்பர் 7ம் தேதி படைவீரர் கொடி நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. கொடிநாள் வசூலாக திரட்டப்படும் நிதி போரில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்தினருக்கு நல நிதியாகவும், போரில் காயமடைந்த வீரர்களுக்கு உதவி செய்திடவும் என பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொடிநாள் நிதி திரட்டும் இலக்காக 95 லட்சத்து, 61 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பினால் 1 கோடியே, 20 லட்சம் ரூபாய் நிதியாக திரட்டப்பட்டு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு கொடிநாள் நிதியாக 1 கோடியே, 10 ஆயிரம் ரூபாய் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான கொடி நாள் வசூல்  இன்று  தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் தேசிய படைவீரர் கொடிநாளை முன்னிட்டு, நன்கொடைகளை தாராளமாக வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி கேட்டுக்கொண்டார். 

    நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் எட்வர்ட்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad