• சற்று முன்

    திமுகவிற்கு கேடு காலம் என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு பேச்சு.


    உதயநிதி நாளை அமைச்சராக பதவி ஏற்கட்டும் அன்னையிலிருந்து திமுகவிற்கு கேடு காலம் என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு பேச்சு..


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு விடியா திமுக அரசை கண்டித்து அதிமுக நகர கழக சார்பில் திமுக அரசின் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு, வன்கொடுமைகள், பெண்கள் பாதுகாப்பு, விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, உள்ளிட்டவைகளை உயர்த்திய விடியா திமுக அரசை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் நகர செயலாளர் விஜய் பாண்டியன் தலைமையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும் கடம்பூர் ராஜூ கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.


    முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு அப்போது பேசுகையில் :

    2024 நாளுமன்ற தேர்தலில் எடப்பாடி தலைமையில் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க தயார் திமுக தயாரா கடம்பூர் ராஜு கேள்வி

    தமிழ்நாட்டு மக்களுக்கு பொங்கல் வச்ச ஆட்சி திமுக ஆட்சி. தேர்தல் நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக்குவேன் என்று கூறினரா சொல்லாததையும் செய்வேன் என்பதற்கு இதைத்தான் அவர் கூறினாரா கேள்வி.

    திமுகவிற்கு எதிராக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் நன்றி தெரிவிக்கும் கூட்டமாக வைத்து கொள்ளலாம் ஏன் என்றால் சொல்லாதையும் செய்து விட்டார்கள் அது தான் பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு உதயநிதிக்கு அமைச்சர் பதவி என சொல்லாததையும் செய்து உள்ளார். உதய நிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி உள்ளதால்  மூத்த அமைச்சர்கள் பொறுமலில் உள்ளனர்.. உதயநிதி நாளை அமைச்சராக பதவி ஏற்கட்டும் அன்னையிலிருந்து திமுகவிற்கு கேடு காலம். தற்போது வரை மொத்த சினிமாவையும் திரைக்குப் பின்னால் தங்கள் கையில் வைத்திருந்தனர் இனிமேல் நேரடியாக தாங்களே வைத்துக் கொள்வார்கள் சினிமா துறையே அவர்கள் கண்ட்ரோலில் கொண்டு வந்து விடுவார்கள்.

    முதல்வரின் வாரிசு தான் வாரிசு படத்தை வெளியிட விடாமல் செய்கிறார் அந்த வாரிசுக்கு தான் நாளை பட்டாபிஷேகம். சொத்து வரி மின் கட்டண உயர்வு ஆர்ப்பாட்டம் மக்களுக்கான ஆர்ப்பாட்டம். ஆர்பாட்டத்தின் மூலம் விளம்பரம் தேடி கொள்ளும் அவசியம் அதிமுக கிடையாது. திமுக ஆட்சியை முழுமையாக நீங்கள் ஆண்டாள் தான் இந்த ஆட்சியின்படும் துன்பங்கள் குறித்து மக்கள் அறிந்து கொள்வார்கள் அடுத்த முறை எங்களை வரவேற்பார்கள்.

    திமுக ஆட்சியின் தற்போது மக்கள் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பேசினார்...

    ஆர்ப்பாட்டத்துக்கு பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,மாவட்ட முன்னாள் ஊராட்சி குழு தலைவி சத்யா,ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், வண்டானம் கருப்பசாமி,மாவட்டம் அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார்,ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, நகர பொருளாளர் ஆரோக்கியராஜ்,மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் நீலகண்டன், ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், நகர மன்ற உறுப்பினர்கள் வள்ளியம்மாள் மாரியப்பன், செண்பகமூர்த்தி,மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் வேலுமணி,மாவட்ட மாணவர் அணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன்,மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலாளர் பாலகணேசன்,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர்,அம்மா பேரவை நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் லட்சுமண குமார், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமான், கழுகுமலை நகர இளைஞரணி செயலாளர் கருப்பசாமி, வழக்கறிஞர் அணி சங்கர் கணேஷ், முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன்,வார்டு செயலாளர்கள் ரவிச்சந்திரன், மகேஷ் பாலா, ரமேஷ், கனிராஜன், முருகன், தமிழக விவசாய சங்க மாவட்ட செயலாளர் அருமைராஜ், வர்த்தக அணி பிரிவு காமராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், அதிமுக நிர்வாகிகள் வெள்ளைச்சாமி, அழகர்சாமி, அல்லித்துரை,பழனி குமார்,பழனி முருகன், முருகன், கோபி, ஜெயசிங், குழந்தை ராஜ், செந்தில்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad