குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

கொடைக்கானல் சுற்றுலா தளத்தில் காளான் கஞ்சா விற்பனை படுஜோர்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்த நிலையில் கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை நடைபெறுவதாக  காவ‌ல்துறையின‌ருக்கு தொட‌ர்ந்து புகார் வ‌ந்த‌து. இதனையடுத்து காவல்துறையினர் கொடைக்கானல் நகர்ப்பகுதி மற்றும் மலைக்கிராமங்களில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்த‌ன‌ர்.

மேலும், கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்.பி பாஸ்கரன் உத்தரவின் பேரில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள், முகமது உசேன் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் கஞ்சா மற்றும் போதை காளான் விற்பது தெரியவந்தது. அவரை கைது செய்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்

பழனி தாலுகா - நிருபர் : சரவண குமார் 

கருத்துரையிடுக

புதியது பழையவை