பொள்ளாச்சி அருகே மலை தேனீக்கள் கொட்டியதில் விவசாயி பலி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஏரிப்பட்டியை சேர்ந்தவர் ஆறுச்சாமி (வயது 50). விவசாயி. சம்பவத்தன்று இவர் அனுப்பர்பாளையத்தில் உள்ள மருதவேல் என்பவரது தோட்டத்துக்கு சென்றார். அப்போது ஆறுச்சாமியை மலை தேனீக்கள் கொட்டியது.
இதில் வலி தாங்க முடியாமல் அவர் அவதிப்பட்டார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் ஆறுச்சாமியை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
கோவை மாவட்ட நிருபர் : அக்கினிபுத்திரன்
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ஆறுச்சாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை