தேயிலை தோட்டத்தில் குட்டி யானைகளுடன் சுற்றித் திரியும் காட்டு யானை கூட்டம்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கு பின்னர் வால்பாறையில் வனப்பகுதி செழிப்பாக உள்ளது. அதே நேரம் சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதால், கேரள வனப்பகுதியில் பக்தர்கள் நடமாட்டம் காரணமாக அப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் மளுக்குப்பாறை வனப்பகுதி வழியாக வால்பாறைக்கு இடம் பெயர்ந்து வரத் தொடங்கி உள்ளன.
இந்த யானைகள் வால்பாறையில் உள்ள பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. யானை கூட்டத்தில் ஒரு பகுதி யானை கூட்டம் தாய் மூடி எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ளது. அதில் பெண் யானை ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு குட்டி ஈன்றது.
இந்த யானை சுற்றிலும் பிற யானைகள் அரணாக நின்று, பாதுகாப்பளித்து வருகின்றன. இதனால் அந்த வழியாக செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.இதற்கிடையே அந்த வழித்தடத்தில் செல்லும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:- தாய்மூடி எஸ்டேட் பகுதியில் ஒரு யானை கூட்டம் முகாமிட்டுள்ளது. அதில் பெண் யானை ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு குட்டி ஈன்றது. பிறந்து சில நாட்களே ஆன குட்டியை பாதுகாக்க யானை கூட்டம் தேயிலை காட்டில் முகாமிட்டுள்ளது. எனவே யானை கூட்டம் முகாமிட்டுள்ள பகுதியில் தொழிலாளர்கள் தேயிலை பறிக்க செல்லக்கூடாது. மேலும் அந்த வழித்தடத்தில் செல்லும் மக்கள் மிக கவனமாக செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மாவட்ட நிருபர் : அக்கினிபுத்திரன்
கருத்துகள் இல்லை