• சற்று முன்

    கோவில்பட்டியில் ஒர்க் ஷாப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்து முன் பகுதி முழுவதும் சேதம்

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டையபுரம் சாலையில் தனியார் லாரி ஷெட் இயங்கி வருகிறது இங்கு கனரக வாகனங்களுக்கு பளு பார்த்தல் பெய்டிங் அடித்தல்  மற்றும் பட்டை கட்டு கட்டும் பணிகள் நடந்து வருகிறது அங்கு நிறுத்தி வைக்கபட்டு இருந்த   லாரிக்கு வெல்டிங் பணிகளை முடித்து விட்டு அங்கு பணியாற்றி வந்த 5 மேற்பட்ட  தொழிலாளர்கள் ஷெட்டை மூடிவிட்டு  வீடுகளுக்கு சென்றனர். இந்நிலையில் இரவு நேரத்தில்  அங்கிருந்த ஒரு லாரியில் திடீரென தீப்பிடித்து  அப்பகுதியில் இருந்து புகைமண்டலம் வருவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் பார்த்து உடனடியாக கிழக்கு காவல் நிலையத்துக்கும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். 


    தீயணைப்புத் துறையினர் உடனடியாக விரைந்து வந்து லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதில் லாரியின் முன்பாகம் சேதமடைந்தது. சம்பவ இடத்துக்கு வந்த போலிஸ்சார்  பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில்  கடைசியாக வெல்டிங் வைத்து விட்டு பணிகள் நடந்த லாரி தீப்பிடித்து உள்ளது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad