Header Ads

  • சற்று முன்

    விருதுநகர் மாவட்டத்தில், 'ஸ்மார்ட் காவலர்' செயலி திட்டத்தை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்


    விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில், 'ஸ்மார்ட் காவலர்' செயலியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் துவக்கி வைத்தார். இது குறித்து அவர் கூறும்போது, விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் மேற்கு, கிழக்கு, பஜார், அருப்புக்கோட்டை நகர், ராஜபாளையம் வடக்கு மற்றும் தெற்கு, திருத்தங்கல், திருவில்லிபுத்தூர் நகர், சாத்தூர் நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் ஸ்மார்ட் காவலர் செயலி திட்டம் துவங்கப்பட்டுள்ளது. 


    பணியில் இருக்கும் போலீசார், இந்த செயலியின் மூலம் தகவல்களை விரைவாக பெற்று, குற்றச் சம்பவங்களை தடுக்க முடியும். பணியில் உள்ள போலீசாருக்கு ஏதேனும் அவசர உதவிகள் தேவைப்பட்டாலும் இந்த செயலி மூலம் விரைந்து செயல்பட முடியும். போலீசாரின் ரோந்து பணிகள், குற்றச் சம்பவங்களை உடனடியாக பதிவு செய்யும் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த ஸ்மார்ட் காவலர் செயலியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். இது குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனப் பேரணியை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad