மதுரையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சமத்துவ மக்கள் கட்சியினர் கைது
மதுரை பழங்காநத்தம் பகுதியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் தமிழகம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையிடம் முறையாக அனுமதி பெறாத நிலையில் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சமத்துவ மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை