• சற்று முன்

    திருமங்கலம் அருகே தமிழக அரசு சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

    திருமங்கலம் அருகே தமிழக அரசு சார்பில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் முகாமில் ரூபாய் 30 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் -  மாவட்ட வருவாய் பங்கேற்பு.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மேல கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்,  திருமங்கலம் வட்டார அளவில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சார்ந்த மக்களிடமிருந்து குறை தீர்ப்பு மனுக்கள் பெறப்பட்ட நிலையில், இதில் ஏற்கனவே மனுக்கள் பெற்றிருந்த கிராம மக்களுக்கு 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு, ரூபாய் 30 லட்சம் செலவில் தமிழக அரசு சார்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் வழங்கினார் .இதில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளி உதவித்தொகை /இலவச வீட்டு மனை பட்டா மற்றும் தையல் இயந்திரங்கள் வேளாண் பொருட்கள், வேளாண் உர மருந்துகள் உள்ளிட்டவைகளை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. முன்னதாக அங்கு வைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு கண்காட்சியினை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் பார்வையிட்டார் . இயற்கை மூலிகைகள், இயற்கை தானிய வகைகள் மற்றும் சுகாதாரத் துறையினர் வைத்திருந்த முன்னெச்சரிக்கை நோய் தடுப்பு முறைகள் ஆகியவற்றை கண்காட்சியில் வைத்திருந்தனர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    [

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad