வேலூர் மண்டலம் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொன் விழா ஆண்டு விழா நடைபெற்றது
வேலூர் மாவட்டம் , காட்பாடி காந்தி நகர் த.கு. வ. வாரியம் தலைமை பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்ற வேலூர் மண்டலம் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொன் விழா ஆண்டு விழாவில் திமுக கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சங்க கொடி ஏற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நல்ல திட்ட உதவிகள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் கி .தமிழ்செல்வம் ,மாநில தலைவர் பா.கருணாநிதி, மாநில பொருளாளர் மு .சக்திவேல் மாநில இணை பொதுச் செயலாளர்கள் சி .எஸ் .ரவி, மு.சங்கர், மோ. பத்மநாபன் மாநிலத் துணைத் தலைவர் ஆ. மதன் ,வடக்கு மண்டல செயலாளர் வி .எஸ் சுகந்தன், சங்க மூத்த ஆலோசகர் ஆர். செல்வராஜ், மண்டல ஒருங்கிணைப்பாளர் நித்யானந்தம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் ஐ. குமரவேல், மாவட்ட செயலாளர் ம .சி. நரேந்திரன் ,மாவட்ட பொருளாளர் க.சதீஷ்குமார், மண்டல ஆலோசகர் அ.தாமஸ் மண்டல துணைச் செயலாளர் ஏ .ராஜ்குமார் ,மண்டல துணை பொருளாளர் ச.ஹேமநாதன், ஆகியோர் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியின் நினைவாக மாநில செயற்குழு உறுப்பினர் சி. ராமன் நன்றி உரையாற்றினார்.
வேலூர் மாவட்ட நிருபர் : S. சுதாகர்
கருத்துகள் இல்லை