• சற்று முன்

    வேலூர் காட்பாடி காந்திநகர் மின் நிலையம், மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஒப்பந்த மின்வாரிய ஊழியர்கள்

    வேலூர் மாவட்டம், வேலூர் காட்பாடி காந்திநகர் மின் நிலையம், மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு அனைத்து மாவட்ட ஒப்பந்த மின்வாரிய ஊழியர்கள் சார்பாக தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரப்படுத்தக் கோரியும், மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பிரிவு வாரியாக அடையாளம் கண்டு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 22.2.2018  முத்தரப்பு  ஒப்பந்தத்தின்படி மின்வாரியமே நேரடியாக தினக்கூலி 380/-வழங்கிட வேண்டும் எனவும், K2 மற்றும் சிட் அக்ரீமெண்டில் பல ஆண்டு காலம் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களை அடையாளம் கண்டு நிரந்தரம் செய்திட வேண்டும் எனவும் கோரிக்கைகள் முன்வைத்து  கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர் . 

    இதில் காட்பாடி ,வேலூர், ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம், கிருஷ்ணகிரி ,ஓசூர் ,தூத்துக்குடி வடசென்னை, ஊட்டி ,நெய்வேலி ,உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வந்து மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில்  கலந்து கொண்டனர்.

    வேலூர் மாவட்ட செய்தியாளர் : S. சுதாகர் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad