• சற்று முன்

    ராஜபாளையத்தில் தாயக சாஸ்தா திருக்கல்யாண நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையத்தில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு நடந்த தாயக சாஸ்தா திருக்கல்யாண நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் செயல்படும் ஶ்ரீ ஹரிஹர பக்த சமாஜம் சார்பில், ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் தாயக சாஸ்தா திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். 3 வது ஆண்டாக இன்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று காலை முதல் கணபதி ஹோமம், மூலவர் மற்றும் பரவார மூர்த்திகள் ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இரவில் சாமி வீதி ஊர்வலம் நடைபெற்றது. இன்று பிற்பகலில் தென்காசி சாலையில் உள்ள சொக்கர் கோயில் மண்டபத்தில் நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தொடக்கத்தில் அய்யப்ப பஜனை நடைபெற்றது. பின்னர் கருப்பசாமி, முனீஸ்வரன் உள்ளிட்ட காவல் தெய்வங்களுக்கும், கல்யாண வரதர் சுவாமிக்கும் வழிபாடு நடைபெற்றது. பின்னர் பெண்கள் சீர்வரிசை தூக்கி வர, மாலை மாற்றுதல் சடங்கிற்கு பிறகு ஶ்ரீ பூர்ணாம்பிகா, புஷ்களாம்பிகா மற்றும் ஶ்ரீ கல்யாண தாயக காஸ்தா திருக்கல்யாணம் நடைபெற்றது. நிகழ்ச்சியின் நிறைவில் திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad