Header Ads

  • சற்று முன்

    சிவகாசியில் பிரசித்திபெற்ற கோவில் தீ விபத்து... பட்டாசுகள் வெடித்த 2 பேர் கைது.....

    சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்துநாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான, பிரசித்தி பெற்ற ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகப் பணிகள் நடந்து வருகிறது. கோவிலின் ராஜகோபுரத்தில் வர்ணம் தீட்டும் பணிகள் நடந்து வரும் நிலையில், கடந்த ஞாயிறு கிழமை இரவு கோபுரத்தை மறைத்து கட்டப்பட்டிருந்த துணியில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கோபுரத்தை மறைத்து கட்டப்பட்டிருந்த துணி மற்றும் சாரங்கள் தீயில் எரிந்து சேதமானது. நல் வாய்ப்பாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சிவகாசி நகர் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் விசாரணையில், பராசக்தி காலனியைச் சேர்ந்த சிலர், திருமண நிகழ்ச்சிக்காக கோவில் முன்பு ஊர்வலமாக சென்றனர். அப்போது வானவெடி மற்றும் பட்டாசுகளை கொளுத்தியுள்ளனர். வானவெடி வெடித்து, கோபுரத்தை மறைத்து கட்டப்பட்டிருந்த துணியில் தீப்பிடித்தது தெரிய வந்தது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையிலும், அஜாக்கிரதையாக பொது இடத்தில் வெடிகளை வெடித்தாக பராசக்தி காலனியைச் சேர்ந்த சதீஸ்குமார், பாலமுருகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad