Header Ads

  • சற்று முன்

    ஓமனில் இலங்கை பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் தூதரக அதிகாரி கைது

     

    இலங்கை பெண்களை ஓமனில் விற்பனை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஓமனிலுள்ள இலங்கை தூதரகத்தில் கடமையாற்றிய மூன்றாவது செயலாளர் .துஷான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

    கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 13ம் தேதி வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆட்கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட



    ஓமனின் இலங்கை தூதரகத்தில் கடமையாற்றிய மூன்றாவது செயலாளர் .துஷானை, இலங்கை அரசாங்கம் பணிநீக்கம் செய்தது. இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்ட துஷானின் ராஜதந்திர கடவுச்சீட்டு, ரத்து செய்யப்பட்டு, அவரை நாட்டிற்கு மீண்டும் வருகைத் தருமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, குறித்த அதிகாரி, ஓமனின் மஸ்கட் நகரிலிருந்து இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகைத் தந்த அவரை, விமான நிலைய வளாகத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்தனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad