பேராசிரியர் க. நெடுஞ்செழியன் காலமானார்
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த குக்கிராமத்தில் பிறந்தவர். ஜக்குபாய் என்ற மனைவியும், இரண்டு மகள்களும்,பெயரன், பெயர்த்தியும் உள்ளனர். திருச்சியிலுள்ள தந்தை பெரியார் அரசு கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணிபுரிந்தார். 20க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். அண்மையில் செம்மொழி விருதினை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் பெற்றார். 89 வயதான இவர் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். இவரது இறுதி ஊர்வலம் நாளை திருச்சி அருகே படுக்கை கிராமத்தில் நல்லடக்கம் நடைபெறுகிறது. கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
கருத்துகள் இல்லை