கோவில்பட்டியில் 1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கி.ரா நினைவரங்கம் மற்றும் நூலகம் - பொதுப்பணித்துறை அரசு முதன்மைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊரக வளர்ச்சி அலுவலக வளாகத்தில் சுமார் ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் மறைந்த கரிசல் இலக்கியத்தின் தந்தை என போற்றப்படும் கி. ராஜநாராயணன் நினைவரங்கம் மற்றும் நூலகம் கட்டப்பட்டு இதற்கான கட்டுமானப் பணிகள் சுமார் 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில் பொதுப்பணித்துறை அரசு முதன்மைச் செயலாளர் மணிவாசன் அவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து பணிகளின் விவரம் குறித்து கேட்டறிந்தனர்.
இந்த ஆய்வின்போது கோட்டாட்சியர் மகாலட்சுமி வட்டாட்சியர் சுசீலா மற்றும் அரசு அதிகாரிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஊழியர்கள் பலர் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை