கோவில்பட்டி அருகே முன் விரோதம் காரணமாக இளைஞரை வெட்டி கொலை-17 வயது இளைஞர் கைது
தூக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் மீரான் பாளையம் தெரு கேசவன் நகரை சேர்ந்த சோலையப்பன் என்பவரது மகன் கார்த்திக்ராஜ்(32) கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இவரது மனைவி லதா(27) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.இதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் முகேஷ் (16) கார்த்திக்ராஜூம் முகேஷும் உறவினர்கள்.
முகேஷ் மது பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.இந்தநிலையில் இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரச்சனை ஏற்பட்டு இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனையெடுத்து இன்று இரவு கார்த்திக் ராஜ் தனது வீட்டிற்கு மீரான் பாளையம் தெருவில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த முகேஷ் கார்த்திக் ராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது முகேஷ் தான் மறைத்து வைத்திருந்த அறிவாலை எடுத்து கார்த்திக் ராஜின் தலை மற்றும் முதுகில் வெட்டி உள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பித்து ஓடிய கார்த்திக் ராஜ் அருகில் இருந்த வீட்டின் உள் சென்றுள்ளார் முகேஷும் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிவிட்டு கார்த்திக் ராஜை அறிவாளால் பலமுறை வெட்டியுள்ளார்.இதில் பலத்த காயமடைந்த கார்த்திக் ராஜ் உயிருக்கு போராடிய நிலையில் ரத்த வெள்ளத்தில் வீட்டினுள் கிடந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விளாத்திகுளம் போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த கார்த்திக் ராஜை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.ஆனால் கார்த்திக் ராஜ் சிகிச்சை பலனின்றி விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.கார்த்திக் ராஜு உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முகேஷை விளாத்திகுளம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை