வேலூர் மாவட்டம், வேலூர் கணபதி துளசிஸ் ஜெயின் பொறியியல் கல்லூரியில்16-வது &17-வது பட்டமளிப்பு விழா
வேலூர் மாவட்டம், வேலூர் கணபதி துளசிஸ் ஜெயின் பொறியியல் கல்லூரியில்16-வது &17-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது .இதில் சிறப்பு விருந்தினர் மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி, அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி மாணவ மாணவிகளுக்கு பட்டமளித்தார். உடன் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஜே. எல். ஈஸ்வரப்பன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அறங்காவலர் சு .வினோத்குமார் பட்டமளிப்பு விழாவினை தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் எம்.பாரதி அவர்கள் பட்டமளிப்பு விழாவினை வழி நடத்தினார். பட்டமளிப்பு விழாவில் கல்லூரி பேராசிரியர்களும் ,மாணவர்களும் ,பெற்றோர்களும் பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட செய்தியாளர் : S. சுதாகர்
கருத்துகள் இல்லை