வாலாஜா மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் WORLD TRAUMA DAY உலக காயத் தினம் 2022 கொண்டாடப்பட்டது
வாலாஜா மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து WORLD TRAUMA DAY உலக காயத் தினம் 2022 கொண்டாடப்பட்டது இதில் வரவேற்புரை: அரசு தலைமை மருத்துவமணை கண்காணிப்பாளர் உஷாநந்தினி விளக்கவுரை: தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு டாக்டர் சிங்காரவேலு சிறப்பு அழைப்பாளர் தலைவர் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சிறுகதைகள் மூலம் உயிரின் அவசியத்தையும் விபத்தியை தடுக்கும் வழிமுறைகளையும் பாதுகாக்க வாகன ஓட்டுவது குறித்தும் பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி கூறினார்.
சிறப்புரை :இணை இயக்குனர் டாக்டர் லட்சுமணன் முன்னிலை உரை மாவட்ட துணைத் தலைவர் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஜே. லட்சுமணன் சிறப்பு விருந்தினர்கள்: வாலாஜா நகர மன்ற தலைவர் ஹரிணி தில்லை வாலாஜா நகர மன்ற துணைத் தலைவர்கமலராகவன், ரெட்கிராஸ் மாவட்ட சேர்மன் பொன் சரவணன் மாவட்ட செயலாளர் கே.எஸ்.ரகுநாதன், மாவட்ட பொருளாளர் என்.டி. சீனிவாசன், வாலாஜா தாலூக்கா கிளை சேர்மன் குளோப் டைல்ஸ் அக்பர்ஷீரிப்,வாலாஜா தாலூக்கா கிளை செயளாலர் டி.கே.குமார், நேஷனல் வெல்ஃபேர் அசோசியேசன் உறுப்பினர்கள் தொழில் அதிபர்கள் சமூக ஆர்வலர்கள் ,டாக்டர்கள் வெங்கடேசன், வாலாஜா வட்டாட்சியர் ஆனந்தன் நன்றியுரை: தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் கீர்த்தி இந்நிகழ்ச்சியில் விபத்து மற்றும் தடுப்பு முதல் உதவி சிகிச்சை முறைகளைப் பற்றி விளக்கி பேசினார்கள் இதில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் செவிலியர்கள் என 200 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மேலும் விபத்தில் ஏற்படாமல் இருக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் மேலும் விபத்தின் போது பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மருத்துவ உபகரணங்களை கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதை மாவட்ட ஆட்சியர் திறந்துவைத்து பார்வையிட்டார்.
கருத்துகள் இல்லை