தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் திடீர் சுகவீனம்
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அமைச்சர் மெய்யநாதன் நேற்று சென்னைக்கு வருகை தருவதற்காக பயணம் செய்தார். புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் ஏறிய அமைச்சர் மெய்யநாதனுக்கு பயணத்தின் போது ரத்த அழுத்தம் காரணமாக திடீர் உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, நள்ளிரவு 2 மணியளவில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கிய அமைச்சர் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு தற்போது அமைச்சர் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை