Header Ads

  • சற்று முன்

    சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை... பட்டாசு உற்பத்தி கடும் பாதிப்பு.....

    சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக, பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று இரவு திருவில்லிபுத்தூர் பகுதிகளில் கனமழை பெய்தது. சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சாரல்மழை விட்டுவிட்டு பெய்தது. இன்று காலை சிவகாசி பகுதிகளில் வெயில் இல்லாமல் வானம் மேக மூட்டத்துடன் இருந்து வருகிறது. புறநகர் பகுதிகளில் லேசான தூறல் மழை பெய்தது. வெயில் சரியாக இல்லாத காரணத்தால், சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக பட்டாசு உற்பத்தி இல்லாத நிலையில், இன்றும் பட்டாசு உற்பத்தி பணிகள் நடைபெறவில்லை. வட மாநிலங்களுக்கு பட்டாசுகள் முழுமையாக அனுப்பப்பட்ட நிலையில், தமிழ்நாட்டிற்கு தேவையான பட்டாசுகள் உடனுக்குடன் தயாரிக்கப்பட்டு, பட்டாசு விற்பனை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். வழக்கமாக தீபாவளி பண்டிகைக்கு 3 நாட்கள் முன்பு வரை, பட்டாசு உற்பத்தி பணிகள் நடந்து வரும். இந்த ஆண்டு பல்வேறு இடையூறுகளால் பட்டாசுகள் உற்பத்தி ஏற்கனவே குறைந்துள்ள நிலையில், பட்டாசுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக பட்டாசுகள் தயாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு விற்பனை கடைகளில் சில வகை பட்டாசுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பட்டாசுகள் தயாரிக்க முடியாத சூழல் இருப்பதால் தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டம் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பட்டாசுகளுக்கு தட்டுப்பாடுகள் ஏற்படுவதுடன், பட்டாசுகளின் விலையும் கடுமையாக உயரும் வாய்ப்புள்ளது என்று பட்டாசு தயாரிப்பாளர்கள் கூறினர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad