Header Ads

 • சற்று முன்

  தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத ஸ்டாலினுக்கு இல்லை ஓட்டு என்று கூற வேண்டும். முன்னாள் அமைச்சர்.ஆர்.பி.உதயகுமார் . பேச்சு.

  சோழவந்தான் : மதுரை புறநகர் மேற்கு மாவட்டம். வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க.சார்பாக 50வது ஆண்டு கட்சி நிறுவன தின பொன் விழா பொதுக்கூட்டம் வாடிப்பட்டி தாதம்பட்டி நீரேத்தான் மந்தை திடலில்நடந்தது. இந்த கூட்டத்திற் கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார்.  கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.பி.  உதயகுமார் எம்.எல்.ஏ., பேசினார் அப்போது அவர் கூறியதாவது: ஸ்டாலின் அவர்களே வருகிற தேர்தலில் வேட்டு போடும் திருவிழாக்கு நீங்கள் வாழ்த்து சொல்லவில்லை அதனால் உங்களுக்கு இல்லை ஒட்டு வைக்கிறோம் வேட்டு என்று கூற வேண்டும். அப்போதுதான் அவருக்கு புத்தி வரும். இது மக்களை முட்டாளாக நினைக்கிற காரணத்தால்தான் ஸ்டாலின் அவர்கள் அரக்க குனத்தோடு அசுரனை அழித்த அந்த நாளிலே உங்களுக்கு வாழ்த்து சொல்லமனம் வரவில்லை. அதற்கு நீங்கள் பாடம் புகட்டினால் தான் வருகிற காலத்தில் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்ற அடிப்படையில் இதைக் கூறுகிறேன். சட்டமன்ற பிரதான எதிர்க்கட்சி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஒரு கோடியே 49 லட்சம் வாக்குகளை பெற்றிருக்கிறார். எதற்காக என்று சொன்னால் எங்கள் அண்ணன் எளிய மக்கள் தொண்டன் எடப்பாடி யார் அவர்கள்  மீண்டும் முதலமைச்சர் ஆக வர வேண்டும் என்பதற்காகதான். நூல் இலையில் தப்பித்தீர்கள் ஒரு லட்சத்து 92 ஆயிரம் வாக்கில் நீங்கள் வெற்றி பெற்றீர்கள். 2011ல்திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது. எங்களுடன் கூட்டணியில் இருந்த தே.மு.தி.க தான் எதிர்க்கட்சி. நீங்கள் மூன்றாவது வரிசையில் தான் உட்கார்ந்து இருந்தீர்கள். அப்படி இருந்த நீங்கள் 2021 இல் ஆட்சி கட்டில் அமர முடியும் என்று சொன்னால் 2021ல் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க அடுத்த தேர்தலில் அண்ணன் எடப்பாடியார் தலைமையில் ஜெயலலிதாவின் புனித அரசை அமைத்துக் காட்டும். சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்தி விட்டீர்கள். மின்சார கட்டணம் உயர்ந்திருக்கிறது.

  பத்தாண்டு காலம் ஜெயலலிதாவின் புனித அரசில் மின்சார கட்டணம் ஒரு பைசா கூட உயர்த்தவில்லை.ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த ஒன்னரை ஆண்டுக்குள் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் மன்றத்தில் நாங்கள் பேசுகின்றோம் அதை சட்டமன்றத்திலும் பதிவு செய்ய வேண்டும். அதனால் கேள்வி கேட்பதற்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டோம். அதைப் பற்றி உங்களோடு விவாதிக்க வேண்டும். காவல்துறையின் மானியகோரிக்கையில் நாட்டில் நடக்கும் கொலை கொள்ளை கற்பழிப்பு வழிப்பறி அத்தனை கொடுமைகளை பற்றி எல்லாம் எங்கள் எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் எடப்பாடியார் கேள்விகள் கேட்டார். அதற்கு முதலமைச்சரால் பதில் சொல்ல முடியவில்லை. சாதாரணதொண்டன், சாமானிய தொண்டன், ஏழை எளிய தொண்டன், யாராக இருந்தாலும் அண்ணா திமுகவில் உழைப்பவர் உயர்ந்த இடத்திற்கு செல்ல முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக எடப்பாடி விளங்குகின்றார்.

  ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வந்த தாலிக்கு தங்கம், அம்மா சிமெண்ட் ,அம்மா குடிநீர், அம்மா உணவகம் என்று இருந்தது எல்லாம் எடப்பாடி யார் தொடர்ந்து மக்களின் நலனில்அக்கறை கொண்டு செயல்படுத்தி வந்தார். ஆனால் ஸ்டாலின் அந்த திட்டங்களை எல்லாம் முடக்கிவிட்டார். திமுக ஆட்சிக்கு வரும்போது எல்லாம் வெடிகுண்டு கலாச்சாரம் தலை தூக்கி விடுகிறது. இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன் கொரியர் கணேசன் எம் வி பி ராஜா பேரூர் செயலாளர்கள் அசோக் முருகேசன் அழகுராஜா குமார் வாடிப்பட்டி யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா முன்னாள் எம்எல்ஏ சரவணன் தவசி உள்பட பேரூர், ஒன்றிய, நகர,கிளை நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பாசறை துணைச் செயலாளர் மணிமாறன் நன்றி கூறினார்.

  செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

  கருத்துகள் இல்லை

  Post Top Ad

  Post Bottom Ad