Header Ads

  • சற்று முன்

    கால்நடைகளுக்கும் தற்போது பிரபலமடைந்து வரும் ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்பம்சம் கால்நடை உதவி இயக்குனர் தகவல்

    மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் கால்நடைகளுக்கும் ஹோமியோபதி சிகிச்சை இப்போது பிரபலமடைந்து வருகிறது ஆங்கில சிகிச்சை முறையில் குணமாக்க கடினமானதும் குணமாக்க முடியாத பல்வேறு நோய்களையும் இந்த சிகிச்சை முறையில் குணப்படுத்த முடியும் குறைந்த செலவு எவ்வித பக்க விளைவுகளும் இல்லாதது சுற்றுச்சூழலுக்கு உகந்தது 100% நோயை முற்றிலும் குணமாக்கக் கூடியது என பல சிறப்புகள் ஹோமியோபதி மருத்துவ சிகிச்சைக்கு உண்டு பசுமாடுகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு மிகப்பரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தக்கூடிய மடிவீக்க நோய், பின்வாதம், மருக்கள், மலட்டுத்தன்மை போன்ற நோய்களையும் நாய்களில் பார்வோ வைரஸ் நோய், மூளைக்காய்ச்சல் நோய், வலிப்பு நோய் மற்றும் கண் நோய்களையும் கோழிகளில் வெள்ளைக்கழிச்சல் நோய் போன்றவை ஹோமியோபதி சிகிச்சை முறையில் முற்றிலும் குணமாக்க முடிகிறது ஹேமியோபதி மருந்தை உருண்டை வடிவ மாத்திரையாகவும்  மற்றும் சொட்டு மருந்து, ஸ்பிரே மூலம் கால்நடைகளுக்கு வழங்கப்படுவதாக மதுரை மாவட்டம் திருமங்கலம் கால்நடை மருத்துவமனை உதவி இயக்குனர் டாக்டர் ஜோசப் அய்யாதுரை தெரிவித்தார்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad