சோழவந்தான் பகுதிகளில்.விலைவாசி உயர்வால் களை.இழந்த ஆயுத பூஜை
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் மார்க்கெட் பகுதி கடைவீதி மாரியம்மன் கோவில் சன்னதி பகுதிகளில் ஆயுத பூஜை விழா சென்ற காலங்களில் மக்கள் கூட்டத்துடன் மிகவும் பரபரப்பாக காணப்படும் ஆனால் அதற்கு மாறாக இந்த ஆண்டு விலைவாசி உயர்வு மற்றும்.மக்களிடம் பணப்புழக்கம் அதிகம் இல்லாதது போன்ற காரணங்களால் மக்கள் கூட்டம் இன்றி சோழவந்தான் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது இது குறித்து வியாபாரிகள் கூறும்போது பொருட்களின் விலை மற்றும் ஜிஎஸ்டி காரணமாக. அனைத்து பொருட்களின்.விலையும் பல மடங்கு உயர்ந்து விட்டதால் மக்களிடம் வாங்கும் திறன் குறைந்து விட்டதாகவும் பணப்புழக்கம் அதிகம் இல்லாததால் விழா காலங்களை கொண்டாடுவதில் பொது மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்றும் கூறுகின்றனர்
இது குறித்து பெயர் சொல்ல விரும்பாத சோழவந்தான் பகுதி வர்த்தக சங்க நிர்வாகி கூறும் போது திருவிழா காலங்களில் கூட மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடப்பது மிகவும் வேதனையாக உள்ளது வரும் காலங்களிலாவது விலைவாசியை கட்டுக்குள் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் எங்களைப் போன்ற வர்த்தகர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படையும் என்று கூறினார்..செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை