குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

மேலக்கால் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா: காப்பு கட்டுதளுடன் தொடங்கியது:

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு காப்பு கட்டுகளுடன் தொடங்கியது.

 காப்பு கட்டுதல் நிகழ்ச்சியில், ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு காப்பு கட்டி சென்றனர். திருவிழாவில், முக்கிய திருவிழாவான வரும் 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வைகை ஆற்றில் கரகம் எடுக்கச் செல்லுதல் மற்றும் இரவு முளைப்பாரி ஊர்வலம் 12ந் தேதிபுதன்கிழமை காலை அம்மனுக்கு கோயில் வாசலில் பொங்கல் வைத்தல் இரவு மாவிளக்கு எடுத்து ஊர்வலம் வருதல் மறுநாள் 13ஆம் தேதிவியாழக்கிழமை முளைப்பாரி ஊர்வலம் முளைப்பாரி எடுத்துச் சென்று வைகை ஆற்றில் கரைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, மேலக்கால் கிராம பொதுமக்கள் கிராம கமிட்டியாளர்கள்  மற்றும் முதன்மை காரர்கள் செய்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

கருத்துரையிடுக

புதியது பழையவை